/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம் நாளை சோமவாரப்பட்டியில் நடக்கிறது 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம் நாளை சோமவாரப்பட்டியில் நடக்கிறது
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம் நாளை சோமவாரப்பட்டியில் நடக்கிறது
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம் நாளை சோமவாரப்பட்டியில் நடக்கிறது
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம் நாளை சோமவாரப்பட்டியில் நடக்கிறது
ADDED : ஜூலை 10, 2024 01:48 AM
உடுமலை;'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ், சோமவாரப்பட்டி, புக்குளம், விருகல்பட்டி ஊராட்சிகளுக்கான சிறப்பு முகாம் நாளை (11ம் தேதி) சோமவாரப்பட்டியில் நடக்கிறது.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், இதர சேவைகளுக்காகவும், 'மக்களுடன் முதல்வர்', திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இம்முகாமில், வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்பு, மின்வாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, தொழிலாளர் துறை, சுகாதாரத்துறை, கால்நடை, வேளாண் ஆகிய 15 அரசு துறை சார்ந்த 44 சேவைகள் வழங்கப்படும்.
மேலும், புதிய மின் இணைப்பு, டேரீப் மாறுதல், மின் இணைப்பு பெயர்மாற்றம் உள்ளிட்ட மின்வாரியம், நில அளவை, பட்டா மாறுதல், உட்பிரிவு, ஜாதி, வருமான சான்று உள்பட வருவாய்த்துறை சான்றுக்கான விண்ணப்பம், காலதாமத பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, பென்ஷன், புதிய குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதி, வர்த்தக அனுமதி, கூட்டுறவு சங்க கடன்; ரேஷன் கார்டு பெயர் மற்றும் முகவரி மாற்றம்.
டி.டி.சி.பி., அனுமதி, புதுமைப்பெண் திட்ட பதிவு, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், இ - பட்டா, தாட்கோ லோன், நீட்ஸ், பி.எம்.இ.ஜி.பி., உள்பட பல்வேறு வகையான தொழில் கடன்கள், நில அபகரிப்பு, பொருளாதார குற்றங்கள், மோசடி, போக்சோ புகார்கள்; புதுமைப்பெண் திட்ட பதிவு; மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பதிவு உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட, சோமவாரப்பட்டி, புக்குளம், விருகல்பட்டி ஊராட்சி மக்களுக்கான சிறப்பு முகாம், நாளை, (11ம் தேதி) சோமவாரப்பட்டி ஜி.கே., மஹாலில் நடக்கிறது.
காலை, 10:00 மணி முதல் பகல், 3:00 மணி வரை, இம்முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் நடத்துவது குறித்து, நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சோமவாரப்பட்டியில் நடந்தது.