/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விழும் நிலையில் சுவர் காத்திருக்கும் ஆபத்து விழும் நிலையில் சுவர் காத்திருக்கும் ஆபத்து
விழும் நிலையில் சுவர் காத்திருக்கும் ஆபத்து
விழும் நிலையில் சுவர் காத்திருக்கும் ஆபத்து
விழும் நிலையில் சுவர் காத்திருக்கும் ஆபத்து
ADDED : ஜூலை 31, 2024 01:01 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 58வது வார்டு செட்டிபாளையம் பகுதியில் அபிராமி கார்டன் உள்ளது. இதன் பிரதான ரோட்டில், பிரின்டிங் நிறுவனத்தினர், பல மீட்டர் நீளத்துக்கு 12 அடி உயரத்தில் ஹாலோ பிளாக் கற்களால் சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர்.
பொது வழித்தடமாக உள்ள ரோட்டில், 3 அடி அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்து 200 அடி நீளம் வரை கட்டப்பட்டுள்ளது. சுவர் கட்டி பல ஆண்டுகளாகிய நிலையில், மிகவும் பலவீனமாக உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லவே அப்பகுதியினர் அச்சப்படும் நிலை உள்ளது.
வார்டு கவுன்சிலர் காந்திமதி கூறுகையில், ''சுற்றுச்சுவர் பிரச்னை குறித்து உரிய நிர்வாகத்திடம் இரு முறை வலியுறுத்தி கூறப்பட்டது. ரோட்டில் செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது,'' என்றார்.