/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சரிந்தது மின் கம்பம்; இருள் சூழ்ந்தது ரோடு சரிந்தது மின் கம்பம்; இருள் சூழ்ந்தது ரோடு
சரிந்தது மின் கம்பம்; இருள் சூழ்ந்தது ரோடு
சரிந்தது மின் கம்பம்; இருள் சூழ்ந்தது ரோடு
சரிந்தது மின் கம்பம்; இருள் சூழ்ந்தது ரோடு
ADDED : ஜூன் 27, 2024 11:25 PM

திருப்பூர் : காந்தி நகரில் ரோட்டின் மையத்தில் இருந்த தெரு விளக்கு கம்பம் வாகனம் மோதியதில் முறிந்து விழுந்து கிடக்கிறது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 13 மற்றும் 23வது வார்டுகளை 80 அடி ரோடு இணைக்கிறது. அவிநாசி ரோடு, காந்தி நகர் சிக்னல் பகுதியிலிருந்து பல்வேறு குடியிருப்பு பகுதி வழியாக சோளிபாளையம் சென்று சேரும் வகையில் இந்த ரோடு உள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன. நீண்ட காலமாக இந்த ரோட்டில் உரிய தெரு விளக்கு வசதி இல்லை.
சில ஆண்டுகள் முன், அப்பகுதி குடியிருப் பாளர்கள் 80 அடி ரோட்டில் 20 தெரு விளக்கு கம்பங்களை அமைத்தனர். இதில், விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. கம்பங்கள் அனைத்தும் ரோட்டின் மையப்பகுதியில் உள்ளன. மையத்தடுப்பு இல்லை.
நேற்று முன்தினம் இரவு இவ்வழியாகச் சென்ற ஒரு வாகனம், ரோட்டின் மையத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளது. இதில் தரையோடு மின் கம்பம் சரிந்து ரோட்டில் விழுந்தது. மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால், அனைத்து கம்பங்களிலும் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
ரோட்டில் விழுந்த மின் கம்பமும் அகற்றப்படாமல் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக ரோட்டின் மையத்தில் கிடக்கிறது.