/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'அடுத்தவர் கஷ்டத்தை புரிந்தவன் மனிதன்' 'அடுத்தவர் கஷ்டத்தை புரிந்தவன் மனிதன்'
'அடுத்தவர் கஷ்டத்தை புரிந்தவன் மனிதன்'
'அடுத்தவர் கஷ்டத்தை புரிந்தவன் மனிதன்'
'அடுத்தவர் கஷ்டத்தை புரிந்தவன் மனிதன்'
ADDED : ஜூலை 03, 2024 02:12 AM

திருப்பூர்;திருப்பூர் தெற்கு ரோட்டரியின், 2024 -25ம் ஆண்டுக்கான அலுவலக பணியாளர்கள் குழு பதவியேற்பு விழா திருப்பூரில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தஞ்சாவூர் சாஸ்த்ரா யுனிவர்சிட்டி பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன் பேசியதாவது:
மனிதன் அறிவியல் உச்சிக்கு சென்றது, தொழில் புரட்சிக்கு பின் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அதிகமாகி, இப்போது தான். மனித அறிவு கூட, கூட, எந்தளவுக்கு இந்த உலகத்தை அழிக்கும் ஆயுதமாக இருக்கும் என்பதை ஒருவர் எழுதியிருக்கிறார். இந்த உலகத்தை, நுாறு தடவை அழிக்கின்ற அளவுக்கு அணுகுண்டுகள் இருப்பு உள்ளது என்று சொல்கின்றார்.
சிங்கம், புலி போன்ற விலங்குகள் தன் இனத்தை கொன்று சாப்பிடுவதில்லை. ஆனால், மனிதன் மட்டும் தான், ஏதாவது காரணத்தை கண்டுபிடித்து தன்னை தானே அழித்து கொள்கிறான். ஆனால், மிருக வாழ்க்கையை விட, மனித வாழ்க்கை சிறந்தது, உயர்ந்தது. எப்படியென்றால் மற்ற உயிரினங்களுக்கு, சக உயிரினங்களின் கஷ்டங்கள் தெரியாது. மனிதனுக்கு மட்டும் தான், அடுத்தவர்களின் கஷ்டம் குறித்து தெரியும். சேவை என்பது எங்கிருந்து வருகிறது என்றால், அடுத்தவர்களின் கஷ்டம் குறித்து தெரிவதில் இருந்து துவங்குகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.