/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஸ் இல்லாமல் சிரமப்படும் மக்கள் கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம் பஸ் இல்லாமல் சிரமப்படும் மக்கள் கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்
பஸ் இல்லாமல் சிரமப்படும் மக்கள் கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்
பஸ் இல்லாமல் சிரமப்படும் மக்கள் கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்
பஸ் இல்லாமல் சிரமப்படும் மக்கள் கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்
ADDED : ஜூலை 20, 2024 01:39 AM
உடுமலை;உடுமலை அருகே, பஸ் பார்க்காத கிராமங்களை ஒருங்கிணைத்து, புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் பழையூர். இக்கிராமத்துக்கு பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, அடிவள்ளி கிராமம் வழியாக, கிராம இணைப்பு ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் இருந்து, 2 கி.மீ., தொலைவில், நெகமம் - பல்லடம் ரோடு உள்ளது. எனவே, உடுமலையிலிருந்து விருகல்பட்டி கிராமம் வழியாக நெகமத்துக்கு, பஸ் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள், 2 கி.மீ., துாரம் நடந்து சென்று, பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.
ராமச்சந்திராபுரம் மற்றும் நெகமம் அரசுப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், நாள்தோறும் விருகல்பட்டி பிரிவுக்கு நடந்து சென்று, பஸ் ஏற வேண்டியுள்ளது.
இதே போல், அருகிலுள்ள ஜோத்தம்பட்டி, மூலனுார் உட்பட கிராமங்களுக்கும் பஸ் வசதி குறைவாகவே உள்ளது.
எனவே, போக்குவரத்து கழகத்தினர், அப்பகுதியில் ஆய்வு நடத்தி, புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், அப்பகுதியினர் பல முறை மனு அனுப்பியும் பயனில்லை.