/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தி சென்னை மொபைல்ஸ் திருப்பூரில் புதிய கிளை தி சென்னை மொபைல்ஸ் திருப்பூரில் புதிய கிளை
தி சென்னை மொபைல்ஸ் திருப்பூரில் புதிய கிளை
தி சென்னை மொபைல்ஸ் திருப்பூரில் புதிய கிளை
தி சென்னை மொபைல்ஸ் திருப்பூரில் புதிய கிளை
ADDED : ஜூன் 15, 2024 12:49 AM

திருப்பூர்;திருப்பூர், அவிநாசி ரோட்டில், தி சென்னை மொபைல்ஸ் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.
தமிழகம், புதுவை, கேரளாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வரும் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம், திருப்பூரில் தனது, 4வது புதிய கிளையை, அவிநாசி ரோடு, புஷ்பா சந்திப்பு பகுதியில் பாரத் டவர்ஸ் வளாகத்தில் நேற்று திறந்தது. நிர்வாகி சம்சூ அலி வரவேற்றார். துணை தலைவர் புகாரி முன்னிலை வகித்தார். பாரத் மெஷின் ஒர்க்ஸ் நிறுவனர் கண்ணன் ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்து, முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
நிர்வாகிகள் கூறியதாவது: புதிய கிளையில் அனைத்து நிறுவனங்களின் மொபைல் போன்கள், கேட்ஜட்ஸ், ஸ்மார்ட் டிவி, 'ஏசி' லேப்டாப் ஆகியன கிடைக்கும். திறப்புவிழா சலுகையாக, ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம், ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கும் அக்ஸசரீஸ்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்படும். 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏசி, லேப்டாப், ஸ்மார்ட் டிவி வாங்கினால் வி.ஐ.பி., டிராவல் பேக் இலவசம்.
ஐ போன் ரகங்கள் மிக குறைந்த விலையில், 6 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் ஆபர் மற்றும் 20 வாட்ஸ் ஆப்பிள் அடாப்டருடன் கிடைக்கும். அனைத்து முன்னணி நிறுவன மொபைல் போன்கள் சிறப்பு சலுகை விலையில் உள்ளது.
ஸ்மார்ட் டிவி வாங்கினால், சுலப மாத தவணை மற்றும் கேஷ் பேக் வசதி உண்டு. 'ஏசி' ஒரு ரூபாய் மட்டும் முன் பணம் செலுத்தி தவணை முறையில் பெறலாம். விவரங்களுக்கு 99444 12345 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.