/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவி எழுதிய புத்தகம் லண்டனில் அங்கீகாரம் மாணவி எழுதிய புத்தகம் லண்டனில் அங்கீகாரம்
மாணவி எழுதிய புத்தகம் லண்டனில் அங்கீகாரம்
மாணவி எழுதிய புத்தகம் லண்டனில் அங்கீகாரம்
மாணவி எழுதிய புத்தகம் லண்டனில் அங்கீகாரம்
ADDED : ஜூலை 26, 2024 11:50 PM

திருப்பூர்;திருப்பூர் பள்ளியை சேர்ந்த மாணவி எழுதிய புத்தகம், உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டது; மாணவியை பலரும் பாராட்டினர்.
திருப்பூர் கே.வி.ஆர்., நகரில் செயல்படும், 'ஸ்காலர்ஸ் ஆர்க் இன்டர்நேஷனல்' பள்ளியில் படிக்கும், 6ம் வகுப்பு மாணவி நிலாபிரசாத், தன் சிறு வயதில், 'தி சில்வர் கோல்டு டவர்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இவருக்கு, குழந்தை மேதை என்ற படமும், லண்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. பல்வேறு உலகநாடுகளை சேர்ந்த பலரும் இம்மாணவியின் திறமையை வியந்த பாராட்டியுள்ளனர்.
திருப்பூர் தெற்கு காவல் துறை துணை கமிஷனர் யாதவ் க்ரிஸ் அசோக், மாணவியை நிலா பிரசாத்தை ஊக்கப்படுத்தும் வகையில், பாராட்டு கடிதம் வழங்கினார். பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவியை பள்ளி தலைவர் நாராயணமூர்த்தி, துணை தலைவர் இந்திராணி, செயலாளர் நிவேதா, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
---
லண்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி நிலா பிரசாத்துக்கு, துணை கமிஷனர் பாராட்டு தெரிவித்தார். அருகில், பள்ளி நிர்வாகிகள்.