/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'டென் எக்ஸ்' - 'ஒய்.எம்.பி.ஏ.,' கூடைப்பந்தில் அபாரம் 'டென் எக்ஸ்' - 'ஒய்.எம்.பி.ஏ.,' கூடைப்பந்தில் அபாரம்
'டென் எக்ஸ்' - 'ஒய்.எம்.பி.ஏ.,' கூடைப்பந்தில் அபாரம்
'டென் எக்ஸ்' - 'ஒய்.எம்.பி.ஏ.,' கூடைப்பந்தில் அபாரம்
'டென் எக்ஸ்' - 'ஒய்.எம்.பி.ஏ.,' கூடைப்பந்தில் அபாரம்
ADDED : ஜூலை 07, 2024 11:16 PM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், திருப்பூர் கூடைப்பந்து குழு சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, 5ம் தேதி முதல் நடந்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் இருந்து, 18 மாணவர் அணிகளும், 16 மாணவியர் அணிகளும் விளையாடி வருகின்றன. நேற்று, காலை, 6:00 மணிக்கு மாணவிகள் அணியின், முதல் அரையிறுதி போட்டியில், 'பெம்' பள்ளி அணியும், நாச்சம்மாள் பள்ளி அணியும் விளையாடின.
மற்றொரு அரையிறுதி போட்டியில், எஸ்.என்.எஸ்., பள்ளி அணியும், டென் எக்ஸ் அணியும் மோதின. காலை, 8:00 மணிக்கு, மாணவருக்கான முதல் அரையிறுதி போட்டியில், டிப்ஸ் பள்ளியும், ஒய்.எம்.பி.ஏ., அணியும் மோதின. மேலும், நஞ்சப்பா பள்ளி அணியும், 'ட்ரை ஷில்ஸ்' அணியும் மோதின.
பிற்பகல், 3:00 மணிக்கு, மூன்றாம் இடம் மற்றும் 4ம் இடத்துக்கான பேட்டிகளும், அதனை தொடர்ந்து இறுதி போட்டியும் நடந்தது.
பெண்கள் பிரிவில், இறுதி போட்டியில் களமிறங்கிய, 'டென் எக்ஸ்' அணி, 57:41 என்ற புள்ளி கணக்கில் முதலிடம் பெற்றது; 'பெம்' பள்ளி இரண்டாமிடமும் பெற்றது. ஆண்கள் பிரிவில், தாராபுரம் ஒய்.எம்.பி.ஏ., அணி, 52:39 புள்ளிகளுடன் முதலிடமும், நஞ்சப்பா பள்ளி அணி இரண்டாமிடமும் பெற்றன.
குறிப்பாக, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், மாணவ, மாணவியர் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பயிற்சி அளித்து, மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தயார்படுத்தப்படுவர் என, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.**
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, திருப்பூர் 'டென் எக்ஸ்' மைதானத்தில் நடந்தது. மாணவியர் பிரிவு இறுதி போட்டியில் பெம் பள்ளி - 'டென் எக்ஸ்' பள்ளி அணியினர் மோதினர்.