/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வரிவிதிப்பு, பெயர் மாற்றத்துக்குப் புதிய படிவம் வரிவிதிப்பு, பெயர் மாற்றத்துக்குப் புதிய படிவம்
வரிவிதிப்பு, பெயர் மாற்றத்துக்குப் புதிய படிவம்
வரிவிதிப்பு, பெயர் மாற்றத்துக்குப் புதிய படிவம்
வரிவிதிப்பு, பெயர் மாற்றத்துக்குப் புதிய படிவம்
ADDED : ஜூன் 29, 2024 01:33 AM
திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:
குடிநீர் ஆதாரங்களை முறையாகப் பின்பற்றி, குடிநீர் பற்றாக்குறை இல்லாத வகையில், அதிகாரிகள் பணியாற்றினர். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவிக்கும் நிலை ஏற்படவில்லை.
கடந்த, 4 மாதத்தில், தெரு விளக்குகள் ஏராளமாகப் பொருத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி பள்ளிகளில், 23 புதிய வகுப்பறை, 150 கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கான்கிரீட் ரோடுகள் அமைக்கும் வகையில் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது. வரி வசூலில், 18வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு வந்துள்ளோம்.
வரி விதிப்பு, பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்டட உரிமையாளர்கள் இதைப் பெற்று நேரடியாக விண்ணப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம். இடைத்தரகர்களை அணுக வேண்டாம்.பணிகள் செய்யும் ஒப்பந்ததாரர்களை அழைத்து உரிய ஆலோசனை வழங்கப்படும்.
குழாய் பதிப்பு பணிகள் செய்யும் போது, கவுன்சிலர்களிடம் அலுவலர்கள் தகவல் தர வேண்டும்; யோசனைகள் கேட்க வேண்டும். மத்திய பஸ் ஸ்டாண்டில் கூடுதல் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கப்படும். மாநகராட்சி சார்பிலும் செக்யூரிட்டிகள் பணியமர்த்தப்படுவர். நகரப்பகுதியில் நெடுஞ்சாலை சார்பில் 56 கி.மீ., அளவு புதிய ரோடு பணி செய்ய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
வரி விதிக்க கோரிய மா.கம்யூ.,
'மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட எங்கள் பகுதியில் இன்னும் ஊராட்சி என்ற அளவில் தான் வரி செலுத்துகின்றனர். முன்னர் ஆயிரம் சதுரடி இருந்த கட்டடங்கள் தற்போது, 5 ஆயிரம் சதுரடியாக அதிகரித்துள்ளது. வரி உயர்த்தப்படவில்லை. இவற்றை யெல்லாம் ஆய்வு செய்தால் வரி வசூலில் முதலிடம் பெற முடியும்' என்று மா.கம்யூ., கவுன்சிலர் மணிமேகலை பேசினார்.
இதனை கேட்ட மேயர், 'வரி உயர்த்த வேண்டும்' என்று, கம்யூ., கட்சி தெரிவிப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து வரியினங்களும் ஆய்வு செய்து புதியவரி விதிக்கப்படும்' என்றார்.
பா.ஜ., கவுன்சிலர்கலகலப்பு
பா.ஜ., கவுன்சிலர் குணசேகரன், மூன்றாம் முறையாக பிரதமரான மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.
அப்போது குறுக்கிட்ட மேயர், 'கடந்த முறையைவிட குறைந்த எம்.பி.,க்கள் தான் கிடைத்துள்ளது' என்று கூறினார்.
அதற்கு குணசேகரன், 'அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தானே ஆட்சி அமைக்க முடிந்தது. நீங்களும் அது போல் தான்,' என்று குறிப்பிட அரங்கில் கலகலப்பு ஏற்பட்டது.