/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தமிழ் மொழியின் சிறப்பு வேறு மொழிகளுக்கு இல்லை தமிழ் மொழியின் சிறப்பு வேறு மொழிகளுக்கு இல்லை
தமிழ் மொழியின் சிறப்பு வேறு மொழிகளுக்கு இல்லை
தமிழ் மொழியின் சிறப்பு வேறு மொழிகளுக்கு இல்லை
தமிழ் மொழியின் சிறப்பு வேறு மொழிகளுக்கு இல்லை
ADDED : ஜூலை 21, 2024 12:43 AM

தமிழக அரசு, பள்ளி, கல்லுாரிகளில் இலக்கிய மன்றங்களை ஏற்படுத்தி, மாணவ சமுதாயத்தினர் மத்தியில் தமிழை வளர்க்க ஊக்குவிப்பு வழங்கி வருகின்றன. அதன்படி, திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி, தமிழ்த்துறை சார்பில், இலக்கிய மன்றக்கூட்டம் நடந்தது.
தமிழ்த்துறை தலைவர் உஷா வரவேற்றார். கல்லுாரி செயலர் டாக்டர் ெஹலன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சகாய தமிழ்ச்செல்வி, முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விக்னேஷ்வரா வித்யாலயா பள்ளி தமிழாசிரியர் ஆழ்வை கண்ணன், 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற தலைப்பில் பேசுகையில், 'தொன்மை, முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, வளமை, தாய்மை, துாய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என, 16 சிறப்புக்களை ஒருங்கே பெற்றது தமிழ்; இந்த பெருமை, வேெறந்த மொழிகளுக்கும் இல்லை.
இதனால் தான், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தும் கிடைத்தது. தற்போது மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து பெற முயற்சி செய்து வருகின்றனர்,'' என்றார்.