Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'சஸ்டெய்னபிலிட்டி' விழிப்புணர்வு இயக்கம்; 'பேர் டிரேடு இந்தியா'வுடன் கரம் கோர்த்த திருப்பூர்

'சஸ்டெய்னபிலிட்டி' விழிப்புணர்வு இயக்கம்; 'பேர் டிரேடு இந்தியா'வுடன் கரம் கோர்த்த திருப்பூர்

'சஸ்டெய்னபிலிட்டி' விழிப்புணர்வு இயக்கம்; 'பேர் டிரேடு இந்தியா'வுடன் கரம் கோர்த்த திருப்பூர்

'சஸ்டெய்னபிலிட்டி' விழிப்புணர்வு இயக்கம்; 'பேர் டிரேடு இந்தியா'வுடன் கரம் கோர்த்த திருப்பூர்

ADDED : ஆக 06, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
திருப்பூர் : ஐரோப்பிய நிதியுதவியுடன், வளம் குன்றா வளர்ச்சி நிலை கோட்பாடு (சஸ்டெய்னபிலிட்டி) குறித்த விழிப்புணர்வு இயக்கம் நடத்த, 'பேர் டிரேடு இந்தியா'வுடன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கரம் கோர்த்து களமிறங்கியுள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும், 'பேர் டிரேடு இந்தியா' அமைப்பு, நாடு முழுவதும் 'ஆர்கானிக்' சான்றிதழ் வழங்கி, ஊக்குவித்து வருகிறது. ஐரோப்பாவுக்கான சேவைகளை, இந்தியாவில் வழங்கி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில், அடுத்த சில ஆண்டுகளில், 'வளம் குன்றா வளர்ச்சி நிலை' கோட்பாடு கட்டாயமாக்கப்படுகிறது. பசுமை ஏற்றுமதியாளர் என்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே, அந்நாட்டு ஆர்டர் கிடைக்கும். இந்நிலையில், 'சஸ்டெய்னபிலிட்டி' குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஐரோப்பாவே நிதி ஒதுக்கி, 'பேர் டிரேடு இந்தியா' அமைப்பை நியமித்துள்ளது.

ஏற்றுமதியாளருக்கு, மரபு சாரா எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாடு, 'கார்பன் உற்பத்தியை குறைப்பது, சமன் செய்வது', கார்பன் கண்டறிவது, சமன்செய்யும் வகையில், மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்துவது குறித்து வழிகாட்டுதல் வழங்க புதிய திட்டம் தயாரித்துள்ளது.

இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், 'சஸ்டெய்னபிளிட்டி மற்றும் திருப்பூர் பிராண்டிங் கமிட்டியின் தலைவர் ஆனந்த் கூறியதாவது:

ஐரோப்பிய நாடுகள், இந்தியாவுடனான வர்த்தகத்தை விரும்புவதால், 'சஸ்டெய்னபிலிட்டி' விழிப்புணர்வு இயக்கம் நடத்த முன்வந்துள்ளது. பெங்களூரு நிறுவனம், இதுபோன்ற பயிற்சிக்கு, 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்தது. இந்நிலையில், ஐரோப்பிய நிதியில், பயிற்சி இலவசமாக அளிக்கப்படுவதை, ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனியார் நிறுவனத்துடன் இணைந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஏற்கனவே 'சர்குலாரிட்டி' என்ற, மறுசுழற்சி தொழில்நுட்பத்தில் மறுபயன்பாடு செய்வதை ஊத்துவித்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக, 'சஸ்டெய்னபிலிட்டி' வழிகாட்டுதல் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பூர் பாப்பீஸ் ஓட்டலில், 'கார்பன்' உமிழ்வது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், நாளை (8ம் தேதி) நடக்க உள்ளது. ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளும், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஐந்து பேர் பங்கேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us