/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிராம மக்களுக்கு திடீர் வாந்தி - பேதி கிராம மக்களுக்கு திடீர் வாந்தி - பேதி
கிராம மக்களுக்கு திடீர் வாந்தி - பேதி
கிராம மக்களுக்கு திடீர் வாந்தி - பேதி
கிராம மக்களுக்கு திடீர் வாந்தி - பேதி
ADDED : ஜூன் 05, 2024 11:03 PM
பல்லடம் : பல்லடம் அருகே, இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலருக்கு திடீர் வாந்தி - பேதி ஏற்பட்டது குறித்து, சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பக்காட்டுப்புதுார் கிராமத்தை சேர்ந்த, ஒரு சிறுமி உட்பட, சிலருக்கு நேற்று முன்தினம் திடீர் வாந்தி - பேதி உள்ளிட்டவை ஏற்பட்டன. காரணம் தெரியாமல் குழப்பம் அடைந்த கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
நேற்று முன்தினம், கோம்பக்காட்டுப்புதுாரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், சிலருக்கு தொடர்ச்சியான ஒரே நேரத்தில் வாந்தி பேதி ஏற்பட்டது. உடனடியாக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றனர்.
நேற்று காலை, சுகாதாரத்துறை குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்ளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இது ஏதேனும் நோய் தொற்றா அல்லது குடிநீர் காரணமா என்பது தெரியவில்லை. இருப்பினும், ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி குடிநீர் மாதிரியை சுகாதாரத் துறையினர் சேகரித்து எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிடா விருந்து - உணவு ஒவ்வாமை
பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த சிலர், நேற்று முன் தினம் நடந்த கிடா வெட்டு விருந்துக்கு சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி - பேதி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
- சுடர்விழி, வட்டார மருத்துவ அலுவலர்.