/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சட்டென்று மாறிய வானிலை மாநகரில் மழைப்பொழிவு சட்டென்று மாறிய வானிலை மாநகரில் மழைப்பொழிவு
சட்டென்று மாறிய வானிலை மாநகரில் மழைப்பொழிவு
சட்டென்று மாறிய வானிலை மாநகரில் மழைப்பொழிவு
சட்டென்று மாறிய வானிலை மாநகரில் மழைப்பொழிவு
ADDED : ஜூன் 07, 2024 12:28 AM
திருப்பூர்;தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை துவங்கியுள்ளது.
இதனால், திருப்பூரில் கடந்த 2ம் தேதி, மாவட்டத்தில் பரவலாக, மிதமான மற்றும் லேசான மழை பெய்தது. அடுத்தடுத்த நாட்கள் மழை நாட்களாக மாறும் என எதிர்பார்த்தநிலையில், மழை பெய்யவில்லை. மாறாக, கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், திருப்பூர் நகர பகுதிகளில் நேற்று மதியம் வானிலை சட்டென்று மாறியது. மதியம், 3:45 மணியளவில், பரவலாக துாறல் மழை பெய்தது. ஒரு மணி நேரம் வரை மழை பெய்ததால், வெப்பத்தின் தாக்கம் தணிந்து, குளிர் பரவியது. பின்னர் தொடர்ந்து மழை துாறிக்கொண்டே இருந்தது.
கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், இந்தாண்டு போதுமான அளவு மழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.