ADDED : ஜூலை 07, 2024 11:09 PM
திருப்பூர்:ஊராட்சிகளில் குடிநீருக்கு அடுத்ததாக, கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி தரும் பணி இன்றியமையாததாக உள்ளது. சாக்கடை கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக குளம் குட்டைகளில் கலக்கப்பட்டு நீர்நிலைகள் மாசடைகின்றன. சாக்கடை கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், துர்நாற்றம் வீசுவதும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி பல்வேறு வகையான நோய்கள் பரவுவதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த காலங்களில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டும், மரங்களுக்கு செல்லும் வகையிலும் கட்டமைக்கப்பட்டன. குடியிருப்புகளில் 'உறிஞ்சு குழி' அமைக்க அவற்றின் அளவைப் பொறுத்து அரசு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிகாரிகள் இதுகுறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், பொதுமக்களும் இதை அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் முழு முனைப்பு காட்ட வேண்டும்.