/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தென்னை சாகுபடிக்கு மானியம் ஒதுக்கீடு தோட்டக்கலைத்துறைக்கு இலக்கு தென்னை சாகுபடிக்கு மானியம் ஒதுக்கீடு தோட்டக்கலைத்துறைக்கு இலக்கு
தென்னை சாகுபடிக்கு மானியம் ஒதுக்கீடு தோட்டக்கலைத்துறைக்கு இலக்கு
தென்னை சாகுபடிக்கு மானியம் ஒதுக்கீடு தோட்டக்கலைத்துறைக்கு இலக்கு
தென்னை சாகுபடிக்கு மானியம் ஒதுக்கீடு தோட்டக்கலைத்துறைக்கு இலக்கு
ADDED : ஜூன் 29, 2024 12:43 AM
உடுமலை;நடப்பாண்டு தென்னை சாகுபடி பரப்பு அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை உடுமலை வட்டாரத்தில் செயல்படுத்த, தோட்டக்கலைத்துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை வட்டாரத்தில், மொத்த சாகுபடி பரப்பில், 75 சதவீதம் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
எனவே, தோட்டக்கலைத்துறை சார்பில், தென்னை சாகுபடிக்கு முக்கியத்துவம் வழங்கி, நடப்பு நிதியாண்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த உடுமலை வட்டாரத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி கூறியிருப்பதாவது:
புதிதாக தென்னை நடவு செய்ய உள்ள விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தென்னங்கன்று மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில், உடுமலை வட்டாரத்துக்கு, 50 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்னை போன்ற பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களில், ஊடுபயிர் சாகுபடிக்கு ஒரு ெஹக்டேருக்கு, ரூ.10 ஆயிரம் மானியம் என்ற விகிதத்தில், 3 ெஹக்டேருக்கு காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
தென்னையில் ஜாதிக்காய் ஊடுபயிராக வளர்ப்பதை ஊக்குவிக்க, உடுமலை வட்டாரத்துக்கு, 25 ெஹக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஒரு ெஹக்டேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜாதிக்காய் நாற்றுகள் மானியத்தில் வழங்கப்படும்.
வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்ய, 13 ெஹக்டேர் இலக்கில், ஒரு ெஹக்டேருக்கு, 17 ஆயிரத்து 500 ரூபாய் மானியத்தில், வாழைக்கன்று அல்லது கிழங்கு மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படும்.
தென்னையில் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில், ெஹக்டேருக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டங்கள் அனைத்தும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2024-25 ம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குரல்குட்டை, பெரியவாளவாடி, எரிசனம்பட்டி, பள்ளபாளையம், குறிச்சிக்கோட்டை, செல்லப்பம்பாளையம், அந்தியூர் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநரை 9842950674 என்ற மொபைல்போன் எண்ணிலும், தோட்டக்கலை அலுவலரை 7373391383; பெரியவாளவாடி, குறிச்சிக்கோட்டை உள்வட்ட விவசாயிகள், 8883610449; உடுமலை உள்வட்ட விவசாயிகள் 9524727052 என்ற மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.