/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சீருடை இல்லாமல் சென்றால் கட்டணம்: பள்ளிக்கு வர தயங்கும் மாணவர்கள் சீருடை இல்லாமல் சென்றால் கட்டணம்: பள்ளிக்கு வர தயங்கும் மாணவர்கள்
சீருடை இல்லாமல் சென்றால் கட்டணம்: பள்ளிக்கு வர தயங்கும் மாணவர்கள்
சீருடை இல்லாமல் சென்றால் கட்டணம்: பள்ளிக்கு வர தயங்கும் மாணவர்கள்
சீருடை இல்லாமல் சென்றால் கட்டணம்: பள்ளிக்கு வர தயங்கும் மாணவர்கள்
ADDED : ஜூன் 15, 2024 12:16 AM
உடுமலை;அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் வரை, அரசு பஸ்களில் டிக்கெட் தொகை கேட்பதை தவிர்க்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய கல்வியாண்டு துவங்கி, சில நாட்கள் மட்டுமே ஆகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர்.
அவர்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக, சீருடை வழங்கப்படுகிறது. கல்வியாண்டு துவங்கியும் மாணவர்களுக்கு இதுவரை சீருடை வழங்கப்படவில்லை.
கடந்த கல்வியாண்டின் சீருடைகளை, சில மாணவர்கள் மட்டுமே தற்போதும் பயன்படுத்தும் நிலையில் வைத்துள்ளனர். பெரும்பான்மையான மாணவர்கள், வண்ண உடைகளில் தான் பள்ளிக்குச்செல்கின்றனர்.
மாணவர்கள் அரசு பஸ்சை பயன்படுத்துவதற்கான, பஸ் பாஸ் வழங்குவதற்கும், தாமதம் ஏற்படுகிறது. தற்போது வண்ண உடைகளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களிடம், அரசு பள்ளிகளில் டிக்கெட் எடுப்பதற்கு நடத்துநர்கள் கேட்கின்றனர்.
இதில், 90 சதவீத அரசு பள்ளிகளில், அருகில் 5 கி.மீ., சுற்றுதொலைவில் இருந்துதான் மாணவர்கள் பஸ்சில் வருகின்றனர். ஆனால் அதற்கும் நாள்தோறும், காலை, மாலை இரண்டு நேரமும் பஸ்சில் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுப்பதற்கு, மிகவும் சிரமபடுகின்றனர்.
குறிப்பாக, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச்சேர்ந்த குழந்தைகள் இதனால் பள்ளிக்கு வருவதற்கும் தயங்குகின்றனர்.
மாணவர்களின் கல்விக்கு இடையூறு இல்லாத வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் அரசு, இப்பிரச்னையை கவனிக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
சீருடை விரைவில் வழங்குவதற்கும், அதுவரை பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் அரசு பஸ்களில் பள்ளிக்கு சென்றுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து புகார் கூறுவதுடன், சீருடை வந்தபின் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதாக தெரிவிக்கின்றனர். நாள்தோறும் பஸ் கட்டணம் செலுத்துவதற்கு, பல குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
பள்ளிகளில் கையெழுத்து போடப்பட்ட படிவங்களை, பஸ்களில் காண்பித்தாலும் கட்டணம் கேட்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். அரசுதான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளியின் சார்பில் வழங்கப்படும் படிவத்தை, அரசு பஸ்களில் மாணவர்களின் அடையாளமாக எடுத்துக்கொண்டு, இலவசமாக பள்ளிக்கு சென்று வருவதற்கு போக்குவரத்து கழகத்தினர் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.