/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வயநாடு மக்களுக்கு மாணவர்கள் நிவாரணம் வயநாடு மக்களுக்கு மாணவர்கள் நிவாரணம்
வயநாடு மக்களுக்கு மாணவர்கள் நிவாரணம்
வயநாடு மக்களுக்கு மாணவர்கள் நிவாரணம்
வயநாடு மக்களுக்கு மாணவர்கள் நிவாரணம்
ADDED : ஆக 06, 2024 11:26 PM
அனுப்பர்பாளையம்: கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் - பாண்டியன் நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்தனர். பாத்திரங்கள், தட்டு, டம்ளர், சமையல் பொருட்கள், மற்றும் போர்வை, துண்டு, குழந்தைகளுக்கு உடை, பனியன், பக்கெட் உள்ளிட்ட 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேகரித்தனர். அப்பொருட்களை, ஆசிரியர்கள் வயநாட்டுக்கு கொண்டு சென்று கொடுக்க முடிவு செய்துள்ளனர்.