/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அபாகஸ் பள்ளியில் மாணவர் அணி தேர்வு அபாகஸ் பள்ளியில் மாணவர் அணி தேர்வு
அபாகஸ் பள்ளியில் மாணவர் அணி தேர்வு
அபாகஸ் பள்ளியில் மாணவர் அணி தேர்வு
அபாகஸ் பள்ளியில் மாணவர் அணி தேர்வு
ADDED : ஜூலை 17, 2024 01:23 AM

திருப்பூர்:திருப்பூர் அபாகஸ் சர்வதேச மாண்டிசோரி பள்ளியில், மாணவர்களுக்கான பதவியேற்பு விழா, நேற்று நடந்தது.
பள்ளி தாளாளர் வெங்கடாச்சலம், செயலாளர் சுரேஷ்பாபு, நிர்வாக இயக்குனர் அப்னா சுரேஷ்பாபு, பள்ளியின் முதல்வர் டாக்டர் ராஜீவ் ரிஷி மங்கலம் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். தேசியக்கொடி மற்றும் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்தனர்.
பள்ளியின் தலைமை மாணவர், துணை தலைமை மாணவர், நால்வகை அணிகளின் தலைமை மாணவர் மற்றும் துணை தலைமை மாணவர், கல்வி அமைச்சர்கள், விளையாட்டு அமைச்சர்கள், உடல்நல அமைச்சர்கள், கலை பண்பாட்டு அமைச்சர்கள் என, மாணவர்கள் பல்வேறு பதவிகளை ஏற்றுக்கொண்டு, உறுதிமொழி வாசித்தனர். பேண்ட் வாத்திய அணியினர் அணிவகுத்து செல்ல, நால்வகை அணிகளும், மிடுக்காக கொடிகளை ஏந்தியபடி அணிவகுத்து சென்றனர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.