/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிரண்ட்லைன் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்வு பிரண்ட்லைன் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்வு
பிரண்ட்லைன் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்வு
பிரண்ட்லைன் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்வு
பிரண்ட்லைன் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்வு
ADDED : ஜூலை 06, 2024 10:38 PM

திருப்பூர்;திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியின் மாணவர் அணி தலைவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நல்லுார் போலீஸ் எஸ்.ஐ., குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் மாணவர் தலைவர், விளையாட்டு துறை தலைவர் மற்றும் பல்வேறு துறை சங்கங்களின் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது.
பள்ளி தாளாளர் சிவசாமி, பள்ளி முதல்வர் லாவண்யா, தலைமையாசிரியர் கமலாம்பாள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாணவர் தலைவராக ரெமி, மாணவியர் தலைவராக ரிதன்யா; விளையாட்டு துறை தலைவராக பவித்ர லட்சுமி, துணை தலைவர் பிரணவ் தேர்வு செய்யப்பட்டனர்.