/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கைத்தறி ஆடைகளுடன் மாணவியர் பேஷன் ேஷா கைத்தறி ஆடைகளுடன் மாணவியர் பேஷன் ேஷா
கைத்தறி ஆடைகளுடன் மாணவியர் பேஷன் ேஷா
கைத்தறி ஆடைகளுடன் மாணவியர் பேஷன் ேஷா
கைத்தறி ஆடைகளுடன் மாணவியர் பேஷன் ேஷா
ADDED : ஆக 03, 2024 06:27 AM

திருப்பூர்: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவை மக்கள் சேவை மையம் சார்பில், திருப்பூர், குமரன் மகளிர் கல்லுாரியில், மாணவியருக்கான கைத்தறி பேஷன் ேஷா - 24 நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். ஆடை வடிவமைப்புத்துறை தலைவர் ேஹமலதா ஏற்பாடுகளை செய்து, ஒருங்கிணைத்தார்.
நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். ஆடை வடிவமைப்புத்துறையை சேர்ந்த, 25 மாணவியர் பங்கேற்றனர். மூன்றாம் ஆண்டு ஆடை வடிவமைப்பு துறை மாணவி, லோகப்பிரியா கோவையில் நடைபெற உள்ள இறுதிச்சுற்று பேஷன்ேஷாவுக்கு தேர்வானார்.