/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பார்த்தீனியம் செடி பரவல் கட்டுப்படுத்த திணறல் பார்த்தீனியம் செடி பரவல் கட்டுப்படுத்த திணறல்
பார்த்தீனியம் செடி பரவல் கட்டுப்படுத்த திணறல்
பார்த்தீனியம் செடி பரவல் கட்டுப்படுத்த திணறல்
பார்த்தீனியம் செடி பரவல் கட்டுப்படுத்த திணறல்
ADDED : ஜூன் 23, 2024 10:55 PM
உடுமலை:பார்த்தீனியம் களைச்செடியின் பரவல், தொடர்ந்து அதிகரித்து வருவதாால், செய்வதறியாது விவசாயிகள் திணறி வருகின்றனர்.
விவசாய சாகுபடியில், களைச்செடிகளால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதில், காய்கறி மற்றும் நீண்ட கால பயிரான தென்னை சாகுபடியிலும், பார்த்தீனியம் களைச்செடியை கட்டுப்படுத்த முடியாமல், விவசாயிகள் திணறுவது தொடர்கதையாக உள்ளது.
அனைத்து சீசன்களிலும், செழித்து வளரும் தன்மையுடைய, பார்த்தீனிய செடியின் விதைகள், காற்று மற்றும் நீரில் பரவும். சாகுபடி பயிர்களின் வளர்ச்சியை பாதிப்பதால், 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
விவசாய தொழிலாளர்களுக்கும் ஒவ்வாமை உட்பட பிரச்னைகள் ஏற்படுகிறது. பார்த்தீனியம் பரவலை கட்டுப்படுத்த தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த அரசு அக்கறை காட்டுவதில்லை.
தற்போது, பருவமழை சீசனில், மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்தில், மேற்கொள்ளப்படும் காய்கறி சாகுபடியில், முக்கிய பிரச்னையாக பார்த்தீனியம் பரவல் உருவெடுத்துள்ளது.
வேளாண்துறை வாயிலாக தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி, பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.