/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்றும் - நாளையும் சிறப்பு பஸ் இயக்கம் இன்றும் - நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
இன்றும் - நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
இன்றும் - நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
இன்றும் - நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஜூலை 26, 2024 11:40 PM
திருப்பூர்:வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, ஒவ்வொரு வாரமும் போக்குவரத்து கழகம், திருப்பூர் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
நடப்பு வாரம் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 10, கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 15, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15 என மொத்தம், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இன்று மதியம் துவங்கி, நாளை இரவு வரை சிறப்பு பஸ்கள் இயங்கும். இந்த பஸ்களில் வழக்கமாக கட்டணமே வசூலிக்கப்படும். மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னைக்கு சேலம் வழியாக நேரடி பஸ் இன்றும் மற்றும் நாளை இரவும் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.