/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காங்கேயம் போலீஸ் ஸ்டேசன்களில் எஸ்.பி., ஆய்வு காங்கேயம் போலீஸ் ஸ்டேசன்களில் எஸ்.பி., ஆய்வு
காங்கேயம் போலீஸ் ஸ்டேசன்களில் எஸ்.பி., ஆய்வு
காங்கேயம் போலீஸ் ஸ்டேசன்களில் எஸ்.பி., ஆய்வு
காங்கேயம் போலீஸ் ஸ்டேசன்களில் எஸ்.பி., ஆய்வு
ADDED : ஜூலை 09, 2024 08:35 PM

காங்கேயம்:காங்கேயம் போலீஸ் ஸ்டேசன்களில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிசேக்குப்தா ஆய்வு செய்தார்.காங்கேயம் சட்ட ஒழுங்கு போலீஸ் ஸ்டேசன், காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் ஆகியவற்றில் மாவட்ட எஸ்.பி., அபிசேக்குப்தா ஆய்வு செய்யும் போது, பதியப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதம் இன்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புகார்களை உடனடியாக ஏற்று விசாரித்து தீர்வு காண வேண்டும். சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் ஸ்டேசனை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றார். ஆய்வின் போது காங்கேயம் டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன், இந்திரா, சப் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், தேவராஜ், கோமதி உட்பட போலீசார் உடன் இருந்தனர்.