Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் சீர்படுத்த எதிர்பார்ப்பு

'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் சீர்படுத்த எதிர்பார்ப்பு

'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் சீர்படுத்த எதிர்பார்ப்பு

'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் சீர்படுத்த எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 16, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;மத்திய அரசில் மோடி முதன் முதலாக பிரதமராக பொறுப்பேற்ற பின், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது அவர் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு புத்துயிர் ஊட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசில் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டப்பட்டது.

அதன் ஒரு கட்டமாக, நகர்ப்புறங்களில் வாழ்விடங்களை மேம்படுத்தும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த தேவையான வளர்ச்சிப் பணிகளை இத்திட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் திட்டம் கொண்டு வரப்பட்டது.

கடந்த, 2015ல், நாடு முழுவதும், 100 நகரங்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் தேர்வான, 11 நகரங்களில் திருப்பூரும் ஒன்று. மாநகராட்சியில் மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 28 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு, மார்க்கெட் வளாகங்கள், ஸ்மார்ட் ரோடுகள், நொய்யல் கரை மேம்பாடு, மாநாட்டு அரங்கம், பன்னடுக்கு வாகன பார்க்கிங் வளாகம், ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

ஒருங்கிணப்பு சுத்தமாக இல்லை


இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் சில பணிகள் நிறைவடையாமல் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான கருத்துருக்கள் தயார் செய்யப்பட்ட போது, உள்ளாட்சி அமைப்பின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் இருந்தது. திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகள் துவங்கிய போது, தனி அலுவலர் வசம் நிர்வாகம் இருந்தது.

இதுபோன்ற காரணங்களால் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தேர்வு செய்தல் மற்றும் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, அதிகாரிகள் மத்தியில் உரிய ஒருங்கிணைப்பு இல்லாததால், திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது.

பணியிடங்களில் கண்காணிப்பு, திட்டம் செயல்படுத்துவது போன்றவற்றில் எந்த ஒரு வரையறையும் பின்பற்றப்படவில்லை.

ஒவ்வொரு கால கட்டத்தில், ஒரு அதிகாரியின் மேற்பார்வை என்ற நிலையில், கட்டுப்பாடற்ற சூழல் காணப்பட்டது.

இதுதவிர, இதற்கான டெண்டர் முடிவு செய்தல், பணி உத்தரவு விதிமுறைகள் அனைத்தும் சென்னையில் உயர் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இதுபோன்ற காரணங்களால் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் பல்வேறு குளறுபடி, பணிகள் முழுமை பெறாத நிலை என ஏகத்துக்கும் குறைபாடுகள் காணப்பட்டது.

மத்திய அரசின் திட்டம் என்ற பெயர் மட்டுமே இருந்தது. முழுமையாக இதை மாநில அளவிலான அதிகாரிகள் மட்டுமே கண்காணித்து, முடிவுகள் மேற்கொண்டனர். மக்கள் பிரதிநிதிகளும் இது குறித்து பெரிய அளவில் அக்கறை செலுத்தவில்லை.

மாநகராட்சியிலும் நிர்வாக குழு பொறுப்பில் இல்லை. நிதி வீணடிப்பு, பணிகள் தாமதம் என இத்திட்டத்தை 'ஸ்மார்ட் இல்லாத திட்டமாக' மாற்றி விட்டது.

தற்போது பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு இத்திட்டத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்த மாநகராட்சி கமிஷனர் தவிர தனிப்பட்ட முறையில் ஒரு அலுவலர் நியமிக்க வேண்டும்.

பணிகள் தேர்வு செய்வது, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி ஒதுக்கீடு பெற்று செலவிடுதல்; பணிக்கான டெண்டர் முடிவு செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டு முதன்மை நிர்வாக அலுவலர் பணியமர்த்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே, ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் செழுமையாக மேற்கொள்ள ஏதுவாக அமையும்.

டெண்டர் முடிவு செய்தல், பணி உத்தரவு விதிமுறைகள் அனைத்தும் சென்னையில் உயர் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் பல்வேறு குளறுபடி, பணிகள் முழுமை பெறாத நிலை என ஏகத்துக்கும் குறைபாடுகள் காணப்பட்டது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us