ADDED : ஜூலை 17, 2024 01:47 AM

தமிழக அரசு பிடிவாதம்...
தொழிலின் சூழ்நிலை கருதாமல் திடீரென உயர்த்தப்பட்டுள்ள இந்த மின் கட்டண உயர்வு தேவையற்றது. ஏற்கனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வரும் நிலையில், இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். மின் கட்டண விவகாரத்தில் மட்டும் அரசு ஏனோ பிடிவாதமாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், ஜவுளி தொழில்துறைக்கான மின் கட்டணம் தமிழகத்தில் மிகவும் அதிகம். எனவே, ஜவுளி தொழில்துறைக்கு என பிரத்யேக மின்கட்டணத்தை கொண்டு வர வேண்டும்.
- சக்திவேல்
ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர்
கைவிட்டு போகும் சூழல்!
சிறு குறு தொழில் நிறுவனங்களின் இன்றைய சூழலை உணராமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது, ஒட்டுமொத்த ஜவுளி தொழில் துறையை வேறு மாநிலங்களுக்கு தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறோம். கடந்த காலத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை. ஓட்டு அரசியல் செய்பவர்களுக்கு தொழில்துறையினரின் நிலைமை புரிவதில்லை. நெருக்கடியில் உள்ள தொழில் துறையினரை பற்றி சிந்திக்காமலும், புரிதல் இல்லாமலும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
- கோவிந்தராஜ்
நாடா இல்லா தறி நெசவாளர்
சங்க ஒருங்கிணைப்பாளர்