/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாக்கடைக்கால்வாய் பணி இழுத்தடிப்பு; வாகனங்கள் திரும்பக்கூட வழி இல்லை சாக்கடைக்கால்வாய் பணி இழுத்தடிப்பு; வாகனங்கள் திரும்பக்கூட வழி இல்லை
சாக்கடைக்கால்வாய் பணி இழுத்தடிப்பு; வாகனங்கள் திரும்பக்கூட வழி இல்லை
சாக்கடைக்கால்வாய் பணி இழுத்தடிப்பு; வாகனங்கள் திரும்பக்கூட வழி இல்லை
சாக்கடைக்கால்வாய் பணி இழுத்தடிப்பு; வாகனங்கள் திரும்பக்கூட வழி இல்லை
ADDED : ஜூன் 13, 2024 11:57 PM

அவிநாசி : அவிநாசி பேரூராட்சி, மேற்கு ரத வீதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் தாமத மாவதால், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் அவதிப்படுகின்றனர்.
அதில், மேற்கு ரத வீதியில் குலாலர் திருமண மண்டபம் சந்திப்பிலிருந்து கோவை மெயின் ரோடு சந்திப்பு வரை சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. சில காரணங்களால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் துவங்கியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் மெயின் ரோடு - மேற்கு ரத வீதி சந்திப்பில் சாக்கடை கால்வாய் நீர் வெளியேற கல்வெர்ட்(சாலையின் கீழ் அமைக்கப்படும் பாலம்) அமைக்கும் பணியும் துவங்கியுள்ளது. இதனால், மேற்கு ரத வீதியில் உள்ளே செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் வழி அடைபட்டுள்ளது.
இந்நிலையில், 'கல்வெர்ட்' அமைக்க சாலை தோண்டப்பட்டு, 4 நாள் ஆகியும் பணிகள் துவங்கவில்லை. திருமணம் உட்பட விசேஷங்கள் அதிகம் நடக்கும் இந்த வைகாசி மாதத்தில், நகை, ஜவுளி, பாத்திரங்கள் வாங்க, ரத வீதியிலுள்ள கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் செல்வர்.
குறிப்பாக, மேற்கு ரத வீதியை பயன்படுத்த முடியாத வகையில், பணிகள் நடைபெறுகிறது. இதனால் மேற்கு ரத வீதியில் உள்ள பலதரப்பட்ட வியாபாரிகள், நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் வாகனங்கள் உள்ளே வந்து திரும்ப முடியாத சூழலால், வாடிக்கையாளராக இருப்பவர்கள் கூடவருவதில்லை என்றும் வேதனைப்படுகின்றனர்.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் தேர், அந்தப் பகுதியை கடக்கும் என்பதால், அதிக உறுதியுடன், 'கல்வெர்ட்' அமைக்க வேண்டும். இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை, அற நிலையத்துறை அதிகாரி கள் மேற்பார்வையில் பணிகள் நடைபெற வேண்டும் என்று, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.