/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாய்க்காலில் பாயும் கழிவுநீர்; அணைக்காடு பகுதியில் அவலம் வாய்க்காலில் பாயும் கழிவுநீர்; அணைக்காடு பகுதியில் அவலம்
வாய்க்காலில் பாயும் கழிவுநீர்; அணைக்காடு பகுதியில் அவலம்
வாய்க்காலில் பாயும் கழிவுநீர்; அணைக்காடு பகுதியில் அவலம்
வாய்க்காலில் பாயும் கழிவுநீர்; அணைக்காடு பகுதியில் அவலம்
ADDED : மார் 14, 2025 12:44 AM

திருப்பூர்; அணைக்காடு பகுதியில் மண்ணரை குளத்துக்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்கால், கழிவு நீர் கல்வாயாக மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், மண்ணரை குளம் அமைந்துள்ளது. இந்த குளத்துக்கு நொய் யல் ஆற்றிலிருந்து நீர் செல்கிறது.
அணைக்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் ஒரு பகுதியில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால் வழியாக செல்லும் நீர் மண்ணரை குளத்துக்குச் சென்று சேர்கிறது.
வாய்க்கால் எம்.ஜி.ஆர். நகர், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளைக் கடந்து கருமாரம்பாளையம் பகுதி வழியாக குளத்துக்குச் செல்கிறது. வாய்க்கால் செல்லும் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நேரடியாக கலக்கிறது.
இதற்காக வரிசையாக அனைத்து வீடுகளிலும் குழாய் பதிக்கப்பட்டு, வாய்க்காலில் சேரும் விதமாக கழிவுநீர் திருப்பி விடப்பட்டுள்ளது.
குளத்தை துார் வாரி, சுத்தம் செய்து, பராமரிப்பு செய்யும் வகையில், பல்வேறு தரப்பினர் முயற்சி மேற்கொண்டு செயல்படுத்தி வரும் நிலையில், வழியோரத்தில் இதில் சேரும் கழிவு நீர் இவற்றையெல்லாம் சீரழிக்கும் நிலை காணப்படுகிறது.
இது குறித்து, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், கழிவுநீர் கலக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.