Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மகனை கொன்றவர்களுக்கு கடும் தண்டனை தேவை'

'மகனை கொன்றவர்களுக்கு கடும் தண்டனை தேவை'

'மகனை கொன்றவர்களுக்கு கடும் தண்டனை தேவை'

'மகனை கொன்றவர்களுக்கு கடும் தண்டனை தேவை'

ADDED : ஜூன் 29, 2024 01:40 AM


Google News
திருப்பூர்;அவிநாசிபாளையத்தை சேர்ந்த வேலாள் என்பவர், கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்த பின், கூறியதாவது:

எனது மகன் வடிவேல், கோவில்பாளையத்தை சேர்ந்த திவ்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த, 2023 ஆக., 25ல் எனது மகனை காணவில்லை; அவிநாசிபாளையம் போலீசில் புகார் அளித்தோம்.

எட்டு மாதங்களுக்கு பின், கோவில்பாளையத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து, போலீசார் சடலத்தை மீட்டனர். காடு விற்ற அட்வான்ஸ் பணம் ஏழு லட்சம் ரூபாய், மகன் வைத்திருந்த வேன் அனைத்தையும் திவ்யா வைத்துக்கொண்டார். திவ்யா, அவரது பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மகனை இழந்து மனவேதனையுடன் வாழ்ந்து வருகிறேன். கொடூரமாக தாக்கி கொலை செய்த நபர்களுக்கு, ஜாமீன் கொடுக்க போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் குற்றபத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு சட்ட அடிப்படையில் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us