/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாராயம் விற்பனையா? புகார் அளிக்கலாம் சாராயம் விற்பனையா? புகார் அளிக்கலாம்
சாராயம் விற்பனையா? புகார் அளிக்கலாம்
சாராயம் விற்பனையா? புகார் அளிக்கலாம்
சாராயம் விற்பனையா? புகார் அளிக்கலாம்
ADDED : ஜூன் 25, 2024 02:16 AM
திருப்பூர்;''கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்'' என்று கலெக்டர் கூறினார்.
கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, எஸ்.பி., அபிஷேக் குப்தா, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், டி.ஆர்.ஓ., ஜெய்பீம் உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் பேசியதாவது:
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தொடர்புடைய துறை கூட்டாய்வு குழுக்கள் தங்கள் பகுதியில் ஆய்வுகளை தீவிரப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறதா என்பதை தொடர்புடைய துறைக்கும், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாவட்டத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பொருட்டு மாநகரில், 94981 - 81209 கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கும், 89398-52100 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும், புறநகரில் 94981 - 81208 கட்டுப்பாட்டு அறைக்கும், 99620-10581 வாட்ஸ் அப் எண்ணுக்கும், மாநில அளவில், 10581 கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.