/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இரண்டாம் கட்ட கலந்தாய்வு அரசு கல்லுாரியில் துவக்கம் இரண்டாம் கட்ட கலந்தாய்வு அரசு கல்லுாரியில் துவக்கம்
இரண்டாம் கட்ட கலந்தாய்வு அரசு கல்லுாரியில் துவக்கம்
இரண்டாம் கட்ட கலந்தாய்வு அரசு கல்லுாரியில் துவக்கம்
இரண்டாம் கட்ட கலந்தாய்வு அரசு கல்லுாரியில் துவக்கம்
ADDED : ஜூன் 24, 2024 10:44 PM
உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்கியது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு இளநிலைப்பாடப்பிரிவில், 864 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு மே இறுதி முதல் துவங்கியது.
முதற்கட்ட கலந்தாய்வில், 725 இடங்கள் நிரப்பப்பட்டன. நிறைவில், கலைப்பிரிவில் - 16, வணிகவியல் பிரிவில் - 40, அறிவியல் பிரிவில் - 52, இலக்கியப் பாடப்பிரிவில் - 31 என, 139 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில் முதல் நாளில், 13 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கலந்தாய்வு, 27ம் தேதி வரை நடக்கிறது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவரின் தரவரிசை இடம் பெற்ற கல்லுாரி இணையதள பக்கத்தின் நகல், சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை தவறாமல் எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.