/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளி மேம்பாடு: மாவட்ட அளவில் குழு பள்ளி மேம்பாடு: மாவட்ட அளவில் குழு
பள்ளி மேம்பாடு: மாவட்ட அளவில் குழு
பள்ளி மேம்பாடு: மாவட்ட அளவில் குழு
பள்ளி மேம்பாடு: மாவட்ட அளவில் குழு
ADDED : ஜூன் 23, 2024 11:13 PM
உடுமலை;பள்ளிகளின் உட்கட்ட மைப்பு மற்றும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த, தொடர்ந்து கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில், 18 பேர் கொண்ட குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழுவில், எஸ்.பி., மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், பள்ளி தலைமை ஆசிரியர் இருவர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நால்வர், ஆசிரியர்கள் இருவர் உள்ளிட்டோர் இடம்பெறுவர். சி.இ.ஓ., செயலராக இருப்பார்.
கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: குழுவினர் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு உயர்கல்வி, பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வரச் செய்தல், அவர்கள் வருகைப்பதிவேட்டை கண்காணித்தல், எண்ணும் எழுத்தும் மற்றும் இல்லம் தேடி கல்வி, வாசிப்பு இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பர்.
மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு துவக்கி கல்வி உதவித் தொகை பெறுதல், படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துதல், புத்தகம் வாங்க ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்வர்.
விரைவில், மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குழு அமைக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.