/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பழம், காய்கறி சாகுபடி அதிகரிக்க திட்டம் பழம், காய்கறி சாகுபடி அதிகரிக்க திட்டம்
பழம், காய்கறி சாகுபடி அதிகரிக்க திட்டம்
பழம், காய்கறி சாகுபடி அதிகரிக்க திட்டம்
பழம், காய்கறி சாகுபடி அதிகரிக்க திட்டம்
ADDED : ஜூன் 21, 2024 12:10 AM
உடுமலை;தோட்டக்கலைத்துறை சார்பில், மடத்துக்குளம் வட்டாரத்தில், பழம் மற்றும் காய்கறி சாகுபடியை அதிகரிக்க, பழ நாற்றுகள், காய்கறி நாற்றுகள், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
அதோடு, அங்கக இடு பொருட்களும் வழங்கப்படுகிறது. பப்பாளி சாகுபடி விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.23 ஆயிரத்து 100, மதிப்புள்ள பப்பாளி நாற்றுகள், அங்கக உரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
புதிதாக பேரிட்சை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் மானியமும், தக்காளி, கத்தரி, வெங்காயம் சாகுபடி விவசாயிகளுக்கு, நாற்றுகள் மற்றும் அங்கக உரங்கள் என, ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரமும், மிளகாய் பயிர் செய்ய, ஒரு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் நாற்றுக்கள், அங்கக இடு பொருட்கள் வழங்கப்படுகிறது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், ஒரு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் வீதம், 3 ஆண்டுகளுக்கு அங்கக வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,200 -மதிப்புள்ள இயற்கை பூஞ்சான கொல்லிகள் வழங்கப்படுகிறது.
பண்ணை குறைபாடு சரி செய்தல் திட்டத்தின் கீழ், கடப்பாரை மண்வெட்டி போன்ற உபகரணங்கள், 2 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் - 96598 38787; நித்யராஜ் - 63821 29721 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.