/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் 'ரோபோடிக்' மூட்டு அறுவை சிகிச்சை பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் 'ரோபோடிக்' மூட்டு அறுவை சிகிச்சை
பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் 'ரோபோடிக்' மூட்டு அறுவை சிகிச்சை
பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் 'ரோபோடிக்' மூட்டு அறுவை சிகிச்சை
பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் 'ரோபோடிக்' மூட்டு அறுவை சிகிச்சை
ADDED : ஜூன் 30, 2024 02:36 AM
திருப்பூர்,:திருப்பூர் பாலா ஆர்த்தோ மருத்துவமனையில், ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம் திறப்பு விழா நாளை நடக்கிறது.
திருப்பூரில் முதன்முறையாக 'ஏ.ஐ.,' தொழில்நுட்ப வசதியுடன் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம், தாராபுரம் ரோட்டில் உள்ள பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் துவங்கப்படவுள்ளது. நாளை (ஜூலை 1ம் தேதி) காலை 10:00 மணிக்கு திறப்பு விழா நடைபெறுகிறது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மண்டல தலைவர் பத்மநாபன், டாக்டர் முருகநாதன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இந்த மருத்துவமனை, 16 ஆண்டு மருத்துவ சேவையை, நீண்ட கால அனுபவம் கொண்ட மருத்துவர் குழு மூலம் வழங்கி வருகிறது. எலும்பு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. உலக தரத்தில், அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அறுவை சிகிச்சை மையம் துவக்கத்தை முன்னிட்டு, அக்., 31 வரை 50 சதவீத சலுகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். கூடுதல், விவரங்களுக்கு 90838 38484, 90868 69696 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.