/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரோடு சீரமைப்பு பணி வாகன ஓட்டிகள் நிம்மதி ரோடு சீரமைப்பு பணி வாகன ஓட்டிகள் நிம்மதி
ரோடு சீரமைப்பு பணி வாகன ஓட்டிகள் நிம்மதி
ரோடு சீரமைப்பு பணி வாகன ஓட்டிகள் நிம்மதி
ரோடு சீரமைப்பு பணி வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : ஜூலை 20, 2024 11:14 PM

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி 44வது வார்டில், கே.எஸ்.சி., பள்ளி வீதி அமைந்துள்ளது.
முக்கியமான இந்த ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியில், 4வது குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், தாமதம் நிலவியது.தோண்டிய குழிகள் முழுமையாக மூடப்படாமலும் மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் புகாரின் பேரில், குழாய் பதிப்பு பணிகள் கடந்த இரு நாட்களாக துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில், வினியோக குழாய்கள் கே.எஸ்.சி., பள்ளி வீதியில் பதிக்கும் பணி ஓரளவு முடிவுக்கு வந்தது.
இதனால், குழி தோண்டிய இடங்களில் மண் கொட்டி சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. சோதனை அடிப்படையில் குடிநீர் சப்ளை செய்து, வினியோக குழாயில் எங்கேனும் உடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்த பின், தார் ரோடு போடும் பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
--------------------------
திருப்பூர், கே.எஸ்.சி., பள்ளி ரோட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.