ADDED : ஜூலை 17, 2024 11:59 PM

அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியில், மூணுகட்டிபாளையம் செல்லும் பாதை தரைமட்ட சாலையாக இருந்தது. 30 ஆண்டாக இப்பகுதியில், மழை காலங்களில் பொதுமக்கள் சாலையைக் கடக்க சிரமப்பட்டு வந்தனர். தற்போது, புதுப்பாளையம் ஊராட்சி நிதியில், 20 லட்சம், ஒன்றிய கவுன்சிலர் நிதியில் 10 லட்சம், மழை வடிகால், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு இணைப்புச் சாலை மற்றும் மேல்மட்ட பாலத்துடன் பணிகள் முடிவடைந்தது.
இதனை, அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் தலைமையில், புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் கஸ்துாரிபிரியா, ஒன்றிய கவுன்சிலர் சித்ரகலா, துணை தலைவர் சங்கீதா, வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் திறப்பு விழா நடந்தது.