ADDED : ஜூன் 20, 2024 05:48 AM
திருப்பூர் ; குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு எஸ்.ஐ., கிருஷ்ணன், குணசேகரன் ஆகியோர், அவிநாசி ஆட்டையம்பாளையம் - அன்னுார் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அங்கு நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்ட போது, 550 கிலோ ரேஷன் அரிசியை கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அரிசி கடத்தியவர் பெருமாநல்லுார் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன், 35 என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், ரேஷன் அரிசியைபறிமுதல் செய்தனர்.