/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரேவதி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம் ரேவதி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ரேவதி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ரேவதி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ரேவதி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : ஜூன் 11, 2024 12:26 AM
திருப்பூர்;ரேவதி கல்வி நிறுவன குழுமம், இந்திய செவிலியர் குழுமம், தமிழக அரசின் செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் போன்றவற்றின் ஒப்புதல் மற்றும் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையுடன் இணைவு பெற்றதாகும். அவிநாசி அருகே புதுப்பாளையத்தில் செயல்படும் கல்லுாரி, பல்வேறு வசதிகளுடன் இயங்கி வருகிறது.
அனைத்து மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், துணை மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. முதுகலை படிப்பாக மருத்துவ மனை நிர்வாகம் நடத்தப்படுகிறது.
உள் மற்றும் வெளிநாடுகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ள இப்படிப்புகள் ஒரு ஆண்டு பயிற்சியுடன், 4 ஆண்டு படிப்புகளாக நடத்தப்படுகிறது. மருத்துவ நிபுணர்களின் வகுப்புகள், துறை சார்ந்த ஆசிரியர்களின் பயிற்சி வகுப்புகள், தலைசிறந்த மருத்துவமனைகளில் பயிற்சி தரப்படுகிறது.
பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவில் படித்த மாணவ, மாணவிகள் இந்த உயர்நிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெற முடியும்.
கூடுதல் விபரங்களுக்கு, 0421-433220, 4332211 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.