/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உப்புக்கரை நதியில் மீண்டும் மண் கடத்தல் உப்புக்கரை நதியில் மீண்டும் மண் கடத்தல்
உப்புக்கரை நதியில் மீண்டும் மண் கடத்தல்
உப்புக்கரை நதியில் மீண்டும் மண் கடத்தல்
உப்புக்கரை நதியில் மீண்டும் மண் கடத்தல்
ADDED : ஜூன் 26, 2024 01:18 AM

பொங்கலுார்;பொங்கலுார், அலகு மலையில் உற்பத்தியாகும் உப்புக்கரை நதி, காங்கயம், ராமலிங்கபுரம் அருகே நொய்யல் நதியில் கலக்கிறது.
இந்த சிற்றாறு நொய்யல் நதியின் பெரிய கிளை ஆறு. கொடுமணல் பகுதியில் காணப்படும் தொல்பொருள் எச்சங்கள் இந்த நதிக்கரை ஓரத்திலும் காணப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்பொழுது ஆக்கிரமிப்புகளாலும், மண் கடத்தலாலும் நதி தன் அடையாளத்தை இழந்து வருகிறது. சமீபத்தில் இந்த நதிக்கரையில் உள்ள கருங்காலிபாளையத்தில் ஏராளமான மண் கடத்தப்பட்டது.
இதுகுறித்து, 'தினமலர்' திருப்பூர் நாளிதழில் செய்தி வெளியானது. இருப்பினும், அதிகாரிகளின் மெத்தனத்தால், மீண்டும் மண் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. ஆளுங்கட்சி பிரமுகர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மண் கடத்தலை தடுத்து, உப்புக்கரை நதியை காப்பாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.