ADDED : ஜூலை 20, 2024 01:28 AM
உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெளியூர், டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு நகரங்களுக்கு செல்ல வருகின்றனர்.
அங்கு திருப்பூர் பஸ்கள் நிற்குமிடத்தில் பயணியர் காத்திருப்பதற்கான இடம் உள்ளது. இங்கு சிறிய தற்காலிக கடைகள் போடப்படுகின்றன.
அங்குள்ள கடைகளும் ஆக்கிரமிக்கின்றன. இதனால், பயணியர் அந்த இடத்தில் அமர முடியாமல் நின்று கொண்டு அவதிப்பட வேண்டியதுள்ளது. எனவே, பயணியருக்கு இடையூறாக போடப்படும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.