/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழியை மூடாததால் விபத்து சீரமைக்க வேண்டுகோள் குழியை மூடாததால் விபத்து சீரமைக்க வேண்டுகோள்
குழியை மூடாததால் விபத்து சீரமைக்க வேண்டுகோள்
குழியை மூடாததால் விபத்து சீரமைக்க வேண்டுகோள்
குழியை மூடாததால் விபத்து சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 07, 2024 12:36 AM

அவிநாசி;அவிநாசி - சேவூர் ரோட்டில் கிழக்கு ரத வீதியில், நாராசா வீதி சந்திப்பில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்காக ஒரு மாதத்திற்கு முன்பாக குழி தோண்டப்பட்டது.
தற்போது வரை குடிநீர் குழாய் உடைப்பையும் சரி செய்யாமல் குழியையும் மூடாமல் உள்ளனர். கற்கள், மண் குவியல் ஆகியவற்றை பிரதான ரோட்டிலேயே போட்டு வைத்துள்ளதால் டூவீலரில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சாலை சந்திப்பிலேயே குழி உள்ளதால், குழி இருப்பதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் எதுவும் இல்லாததால் ஒரே வாரத்தில் ஆறு விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைந்தனர்,
இது குறித்து, பேரூராட்சி உதவி பொறியாளர் சீனிவாசன் கூறுகையில், ''இரு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்தது குறித்து தகவல் கிடைத்ததும் அதனை சரி செய்வதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் மூன்று நாட்கள் பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுள்ளது.அதன் காரணமாகவே குழாய் அடைப்பை உடனடியாக சரி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ள முடியவில்லை,'' என்றார்.