ADDED : ஜூன் 17, 2024 12:21 AM

அவிநாசி:அவிநாசியில் உள்ள ரேக்ளா நண்பர்கள், ராயம்பாளையம் ஊர் மக்கள் மற்றும் அவிநாசி ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில், 2ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடந்தது.
திருப்பூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 700க்கும் மேற்பட்ட காளைகள், 400 ரேக்ளா வண்டிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். 200 மற்றும் 300 மீட்டர் என, இரு பிரிவுகளாக நடந்தது.
இதில், 200 மீட்டரில், முதல் பரிசான ஒரு சவரன் தங்க நாணயத்தை, ஓடையகுளத்தை சேர்ந்த செல்வராஜ், இரண்டாமிடத்தை ஜே.என்.பாளையத்தை சேர்ந்த ராஜூ, வட்டமலைபுதுாரை சேர்ந்த ராகுல் பழனிசாமி மூன்றாமிடம் பிடித்தார். 300 மீட்டரில், காளியாபரத்தை சேர்ந்த அகிலன், பிரபு ஆகியோர் முதலிடம், செட்டியக்காபாளையத்தை சேர்ந்த ராஜா, சதீஷ்குமார் ஆகியோர் இரண்டாமிடம் செல்வராஜ், காளிமுத்து, மூன்றாமிடம் பிடித்தனர். தொடர்ந்து, நான்காம் பரிசு முதல், 35ம் பரிசு வரை கோப்பைகளும், ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.