/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தனி நபருக்கு ஊராட்சி நிலம் அனுமதி ரத்து செய்ய பரிந்துரை தனி நபருக்கு ஊராட்சி நிலம் அனுமதி ரத்து செய்ய பரிந்துரை
தனி நபருக்கு ஊராட்சி நிலம் அனுமதி ரத்து செய்ய பரிந்துரை
தனி நபருக்கு ஊராட்சி நிலம் அனுமதி ரத்து செய்ய பரிந்துரை
தனி நபருக்கு ஊராட்சி நிலம் அனுமதி ரத்து செய்ய பரிந்துரை
ADDED : ஜூன் 07, 2024 12:40 AM
பல்லடம்:பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி, மின் நகர் பகுதியில், ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூட நிலம் உள்ளது.
இந்நிலத்துக்கு, தனிநபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும், அண்ணா நகரை சேர்ந்த நாகூர் மீரான் என்பவர் ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக பல்லடம் பி.டி.ஓ., தவறான பதில் அளித்துள்ளதாக கூறி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனருக்கு, நாகூர் மீரான் மீண்டும் புகார் மனு அளித்தார். ஊராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டை விற்பதற்கு ஊராட்சி தலைவர் தீர்மானம் நிறைவேற்றியது சரிதானா; ரிசர்வ் சைட்டை விற்பதற்கு தடையின்மை சான்று வழங்கியது சட்டத்துக்கு உட்பட்டதா என்று அறிக்கை அளிக்குமாறு ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பிய புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
''ஊராட்சி நிலத்துக்கு தனி நபர் பெயரில் டி.டி.சி.பி., அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது; இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, ஊராட்சி நிலத்தை மீட்க ஆர்.டி.ஓ.,. உத்தரவிட வேண்டும்'' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்லடம் பி.டி.ஓ., மனோகரன், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ''ஊராட்சிக்கு உட்பட்ட சமுதாய நலக்கூட இடம், தனிநபருக்கு வழங்க ஊராட்சி மூலம் தவறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவறாக நிறைவேற்றப்பட்ட இத்த தீர்மானத்தை ரத்து செய்து தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலர், குடியிருப்பு மனை உட்பிரிவுக்கான தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டதை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.