/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கம்பன் காவியத்தில் பிரமிக்க வைப்பது ராமனே' 'கம்பன் காவியத்தில் பிரமிக்க வைப்பது ராமனே'
'கம்பன் காவியத்தில் பிரமிக்க வைப்பது ராமனே'
'கம்பன் காவியத்தில் பிரமிக்க வைப்பது ராமனே'
'கம்பன் காவியத்தில் பிரமிக்க வைப்பது ராமனே'
ADDED : ஜூலை 29, 2024 12:13 AM

திருப்பூர்:திருப்பூர் கம்பன் கழக பட்டிமன்றத்தில், 'கம்பன் காவியத்தில் கற்போர் நெஞ்சை பெரிதும் பிரமிக்க வைப்பது ராமனே' என்று நடுவராகச் செயல்பட்ட சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியம் தீர்ப்பு வழங்கினார்.
திருப்பூர் கம்பன் கழகம் சார்பில், 'கம்பன் விழா -2024' ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைவர், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வரவேற்றார். அவிநாசி திருத்தல புராணம் என்ற நுால் குறித்து, அதன் ஆசிரியரான, பொது செயலாளர் ராமகிருஷ்ணன் பேசினார்.
புத்தகத்தை, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியம் வெளியிட, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், அவிநாசி கோவில் சிவாச்சாரியார்கள் சிவக்குமார், ஆரூர சுப்பிரமணியம், வனம் இந்தியா பவுண்டேஷன் தலைவர் சுந்தர்ராஜன், கம்பன் கழக துணை செயலாளர் கவுசல்யா பெற்றுக்கொண்டனர்.
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியம் நடுவராக இருந்த, 'கம்பன் காவியத்தில் கற்போர் நெஞ்சை பெரிதும் பிரமிக்க வைப்பவர், ராமனே! வாலியே! ராவணனே!' என்ற பட்டிமன்றம் நடந்தது.
கவிஞர் விஜயகிருஷ்ணன், கபிலா விசாலாட்சி; ரவிக்குமார், கோவை கவிநிலவன்;ராஜபாளையம் கவிதா ஜவகர், ஆடிட்டர் தெய்வநாயகி ஆகியோர் பேசினர்.
நடுவர் ராமசுப்பிரமணியம் பேசுகையில், ''கம்பராமாயணம், வாழ்வியல் பாடங்களை கற்பிக்கிறது. அறவாழ்வுக்கு தேவையான கருத்துக்கள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு காட்சி வாயிலாக, மனிதருக்கு தேவையான வழிகாட்டுதலை கம்பர் வழங்கியிருக்கிறார்.
நாம் அவற்றை பின்பற்றி வாழ வேண்டும். பலரது வாதங்களை கேட்டறிந்த பிறகு, கம்பன் காவியத்தில் கற்போர் நெஞ்சை பெரிதும் பிரமிக்க வைப்பது யார் என்று தெரிகிறது. தியாகம், சகிப்புத்தன்மை என, உயர்குணங்களுடன் வாழ்ந்த ராமனே பிரமிக்க வைக்கிறான்,'' என்றார்.
முன்னதாக, கம்பன் விழாவை முன்னிட்டு நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.