Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மழைக்காலம் துவங்கி விட்டது... துாய்மை பணியாளருக்கு அறிவுறுத்தல்

மழைக்காலம் துவங்கி விட்டது... துாய்மை பணியாளருக்கு அறிவுறுத்தல்

மழைக்காலம் துவங்கி விட்டது... துாய்மை பணியாளருக்கு அறிவுறுத்தல்

மழைக்காலம் துவங்கி விட்டது... துாய்மை பணியாளருக்கு அறிவுறுத்தல்

ADDED : ஜூலை 18, 2024 10:51 PM


Google News
திருப்பூர்;மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், துாய்மை மற்றும் சுகாதார பணிகளை முறையாக மேற்கொள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தென் மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்யத் துவங்கியுள்ளது. மழை மேலும் வலுவடையும் நிலையில், மழை நீர் பெருக்கெடுத்து வரும். இதனால், மழை நீர் வடிகால்கள், கழிவு நீர் வடிகால், ஓடைகள் மற்றும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரிக்கும்.

இதுதவிர, மாநகர பகுதியில் உள்ள வடிகால்களில் சேகரமாகும் மழை நீர் செல்லும். இது போன்ற நேரங்களில் அதிகளவிலான மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து செல்லும்; வடிகால்களில் அடைப்புகள் இருக்கும் நிலையில், இந்த தண்ணீர் ரோட்டில் சென்று பாய்வதும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் சென்று தேங்குவதும் நகரில் பல பகுதிகளில் வாடிக்கையாக உள்ளது.

எனவே, முன்னசெ்சரிக்கை நடவடிக்கையாக, வடிகால்கள் முறையாக துார் வாரி, தண்ணீர் தடையின்றிச் செல்ல ஏதுவாக தயார்படுத்த வேண்டும். மழை நாட்களில் தொற்று நோய்களும் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, சுகாதாரப் பணிகளும் கவனமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி துாய்மைப்பணியாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கும் வகையில் மங்கலம் ரோடு, மாநகராட்சி மாட்டுக் கொட்டகை வளாகத்தில், கூட்டம் நேற்று நடந்தது. மேயர் திேனஷ் குமார் தலைமை வகித்தார். கமிஷனர் பவன்குமார், நகர் நல அலுவர் கவுரி சரவணன், துணை கமிஷனர் சுல்தானா முன்னிலை வகித்தனர். நான்கு மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us