/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கல் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கல்
மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கல்
மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கல்
மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கல்
ADDED : ஜூலை 03, 2024 12:07 AM
திருப்பூர்;ஊத்துக்குளி ஒன்றியம், கீளரப்பதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரஸ்வதி என்பவர், சக்கர நாற்காலி உதவி வேண்டுமென, சக் ஷம் அமைப்பினரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த சக் ஷம் அமைப்பினர், உதவி செய்ய முயற்சி எடுத்தனர்.
லகு உத்யோக் பாரதி மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு பங்களிப்புடன், சக்கர நாற்காலி நேற்று வழங்கப்பட்டது. சக்கர நாற்காலியை, சக் ஷம் அமைப்பின் மாவட்ட துணை தலைவர் ரத்தினசாமி, நேற்று பயனாளியின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.