/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புதுமண தம்பதியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல் புதுமண தம்பதியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
புதுமண தம்பதியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
புதுமண தம்பதியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
புதுமண தம்பதியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஜூன் 01, 2024 11:15 PM

பல்லடம்:பல்லடத்தில், புதுமண தம்பதியரின் திருமணத்துக்கு தேவையான உதவிகளை ரோட்டரி ரெயின்போ சங்கம் வழங்கியது.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த திரவியம் - -மலர் தம்பதியரின் மகன் கிருஷ்ணகுமார், 25; மதுரை சிக்கந்தர் சாவடியை சேர்ந்த செந்தில்குமார் - -மகாலட்சுமி தம்பதியரின் மகள் சுபலட்சுமி, 23. இருவருக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவரும் வசதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
திருமணத்துக்கான செலவுகளை மேற்கொள்ள முடியாமல், மணமக்கள் வீட்டார் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த, பல்லடம் ரோட்டரி ரெயின்போ சங்க நிர்வாகிகள், திருமணத்துக்கு தேவையான உதவிகளை வழங்கினர். இதற்கான நிகழ்ச்சி, பல்லடம் வனம் அமைப்பின் அடிகளார் அரங்கில் நடந்தது. ரோட்டரி ரெயின்போ சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ஆறுமுகம், பட்டய தலைவர் நடராஜன் மற்றும் பானு பழனிசாமி முன்னிலை வகித்தனர். வனம் அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். மணமக்களுக்கு சீர் வரிசை வழங்கப்பட்டது.