/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கலவை இயந்திரத்தை நிறுத்தி போராட்டம் கலவை இயந்திரத்தை நிறுத்தி போராட்டம்
கலவை இயந்திரத்தை நிறுத்தி போராட்டம்
கலவை இயந்திரத்தை நிறுத்தி போராட்டம்
கலவை இயந்திரத்தை நிறுத்தி போராட்டம்
ADDED : ஜூலை 05, 2024 01:14 AM

அவிநாசி;திருமுருகன்பூண்டி, திருப்பூர் - அவிநாசி ரோட்டில் 39 கோடி ரூபாய் செலவில், மினி டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது, ஏழாவது தளத்தின் மேற்பரப்பில் கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் தளத்திற்கு கான்கிரீட் போடும் பணிகளை அவிநாசி பகுதியைச் சேர்ந்த மருதாசலம் 42, மேற்கொண்டார். ஆனால், டைடல் பார்க்க கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளவர், ஏழு மாதமாக உரிய தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதனால், நேற்று கட்டுமான கலவை இயந்திரங்கள், வாகனங்களை டைடல் பார்க் நுழைவாயிலை மறித்து மருதாசலம் நிறுத்தி வைத்தார்.
அவர் கூறுகையில், 'கடந்தாண்டு இறுதியில், முதல் தளத்திற்கு கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்றது. ஆனால், ஏழு மாதம் கடந்தும், பில் தரவில்லை. தற்போது வேறு நிறுவனத்தை வைத்து பணிகளும் முடியும் தருவாயில் உள்ளதால், சேர வேண்டிய தொகை கேட்டு போராடி வருகிறோம்,'' என்றார்.
பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தின் தொழில்நுட்ப பொது மேலாளர் கலைச்செல்வன் கூறுகையில், ''டைடல் பார்க் கட்டுமானத்திற்குபொருட்கள் சப்ளை செய்யும் அனைவருக்குமே பில் தொகை நிறுத்தி வைத்து தான் வழங்குகிறோம். ஒரு வாரத்தில், அனைத்தும் சரி செய்யப்படும்,'' என்றார்.