ADDED : ஜூலை 19, 2024 01:09 AM
திருப்பூர்;சிருங்கேரி சாரதா பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமியின், 50வது சன்னியாச ஆண்டை முன்னிட்டு, ஸ்வர்ண பாரதி எனும் விழா நாடு முழுதும் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் கிளை சிருங்கேரி மடம் மற்றும் சக் ஷம் சார்பில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான செயற்கை அவயம் மற்றும் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நாளை (20ம் தேதி) நடக்கிறது.
திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் காலை, 9:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. இதில், சக் ஷம் தேசிய ஆலோசகர் ஆடிட்டர் ராமநாதன், மாவட்ட தலைவர் ரத்தினசாமி, சேவா பாரதி மாவட்ட தலைவர் பிரேம் பிரகாஷ் சிக்கா உட்பட பலர் பங்கேற்கின்றனர்.