/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சொத்து வரி பெயர் மாற்றம்:மாநகராட்சி எச்சரிக்கை சொத்து வரி பெயர் மாற்றம்:மாநகராட்சி எச்சரிக்கை
சொத்து வரி பெயர் மாற்றம்:மாநகராட்சி எச்சரிக்கை
சொத்து வரி பெயர் மாற்றம்:மாநகராட்சி எச்சரிக்கை
சொத்து வரி பெயர் மாற்றம்:மாநகராட்சி எச்சரிக்கை
ADDED : ஜூலை 09, 2024 10:55 PM
திருப்பூர்:மாநகராட்சி பகுதியில் சொத்து வரி விதிப்பு, பெயர் மாற்றம் போன்ற பணிகளுக்கு தனி நபர்களை அணுக கூடாது; நேரடியாக அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் முறையாக மேற்கொள்ளும் வகையில் நிர்வாகம் பணியாற்றி வருகிறது. இதுபோன்ற பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக, உரிய மண்டல அலுவலகங்களில் உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்குரிய ஒப்புகை சீட்டினைப் பெற வேண்டும். கோரிக்கைகளுக்கு உரிய தனித்தனிப் படிவங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இதற்கென உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இப்பணிகளுக்கு தனி நபர்கள் யாரிடமும் விண்ணப்பிக்க கூடாது.இது தொடர்பாக விரிவான விளக்கம் பெற, 155304 என்ற இலவச தொலைபேசி எண்; 0421 232 1500 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.