ADDED : ஜூலை 01, 2024 01:55 AM
திருப்பூர் மாவட்டத்தில், துணை தாசில்தார் இருவருக்கு, தாசில்தாராக பதவி உயர்வு வழங்கியும், பணி மாறுதல் செய்தும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மடத்துக்குளம் தலைமையிடத்து தனி தாசில்தார் திரவியம், திருப்பூர் கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும்; காங்கயம் தலைமையிடத்து துணை தாசில்தார் உஷாராணி, மாவட்ட வழங்கல் பிரிவு பறக்கும்படை தாசில்தாராகவும் பதவி உயர்வுடன் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.